மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!!


மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் (24) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விசேடமாக சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கொவிட் காலகட்டத்தில் சிறப்பாக தங்களது சேவையினை முன்னெடுத்த சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டார்.