மலரும் புத்தாண்டு சுப நேரங்கள்- வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


எமது நாட்டு மக்களுக்கு பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் மலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும், துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய எமது மட்டு நியூஸ் இணையத்தள ஊடக சேவையின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கொரோனா தொற்று, அந்நிய செலவாணி இழப்பு அதனுடன் தொடர்புபட்டு பொருளாதார நெருக்கடி எனப் பல காரணங்கள் இருந்தாலும் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.

தற்போதைய நெருக்கடிகள் தீரும். எரிபொருளுக்காகவும் எரிவாயுவிற்காகவும் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்கும் காலம் விரைவில் மாறி மக்களின் போராட்டங்களுக்கு விரைவில் தீர்வு கிட்டி இலங்கை மக்களின் வாழ்வு வளம்பெறும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தித்துக்கொள்வோம்.

இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர மட்டு நியூஸ் இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

'சுப­கி­ருது'' வருடப்பிறப்பு

எமது பாரம்­ப­ரிய 60 வருட சுற்றின் 36 வரு­ஷ­மா­கிய ''சுப­கி­ருது'' எனும் நாமம் கொண்ட புதுவருஷம் இன்று 14.04.2022 வியா­ழக்­கி­ழமை காலை 7 மணி 50 நிமி­ட­ நே­ரத்தில் மலர்கின்­றது.

இதன் பிர­காரம் பாரம்­ப­ரிய வாக்­கிய பஞ்­சாங்க கணி­தப்­படி பூர்வ திர­யோ­தசி திதி, பூரம் நட்­சத்­திரம் 4ஆம் பாதம் விருத்தி நாம­யோகம், கெள­ல­வ­க­ரணம் மேட லக்னம் தனு நவாம்சம் எனும் பஞ்­சாங்க சுபசேர்க்­கைகள் அமை­கின்­றன.

விஷு புண்­ணி­ய­காலம் 14.04.2022 அதி­காலை 3 மணி 50 நிமிடம் முதல் முற்­பகல் 11 மணி 50 நிமிடம் வரை இப்­புண்­ணி­ய­ கா­லத்தில் விதிப்­படி மன­தார உங்கள் குல­தெய்வ சுவா­மி­களை வணங்கி மருத்­துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து சிவப்பு அல்­லது மஞ்சள் நிற புத்­தாடை அணிந்து பவளம், புஷ்­ப­ராகம் இளைத்த ஆப­ரணம் தரித்து உங்கள் இல்ல­ங்­க ளில் சூரி­ய­னுக்கு பொங்கல் பொங்கி படைத்து வழி­பாடு ஆற்றி விநா­யகர் முத­லான குல தெய்வ வழி­பாடு செய்தல், பெரியோரை வணங்கி உற்றார், உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை உணவருந்தி புதிய வருஷ பலாபலன்களை கேட்டும் வாசித்தும் அறிந்து நற்சிந்தனையோடு இந்நாட்பொழதை கொள்ள வேண்டும்.

சங்­கி­ரம தோஷ நட்­சத்­தி­ரங்கள்

பரணி, மகம், பூரம், உத்­தரம் 1ஆம் பாதம்,

பூராடம், உத்­த­ராடம் 2,3, 4 ஆம் பாதம், திரு

­வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம் இவர் கள் தவ­றாது மருத்து நீர் ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்­ய­ வேண்டும்.

கைவி­ஷேட நேரம்

14.04.2022 வியாழன் காலை 7.57 முதல் 8.47 வரை மற்றும் காலை 10.36 முதல் 11.56 வரை.

புது­வி­யா­பாரம் புதுக்­க­ணக்கு

14.04.2022 வியாழன் காலை 10.36 முதல் 11.56 வரை

15.04.2022 வெள்ளி காலை 8.36 முதல் 9.51 வரை

ராசி­களின் ஆதாய வியயம்

மேடம் – 14 வரவு 14 செலவு சமம்

இடபம் – 8 வரவு 8 செலவு சமம்

மிதுனம் – 11 வரவு 5 செலவு லாபம்

கடகம் – 11 வரவு 11 செலவு சமம்

சிங்கம் – 8 வரவு / 14 செலவு = நஷ்டம்

கன்னி – 11 வரவு / 5 செலவு = லாபம்

துலாம் – 8 வரவு / 8 செலவு = சமம்

விருட்­சிகம் – 14 வரவு / 14 செலவு = சமம்

தனுசு – 2 வரவு / 8 செலவு = நஷ்டம்

மகரம் – 5 வரவு / 2 செலவு = லாபம்

கும்பம்– 5 வரவு / 2 செலவு = லாபம்

மீனம் – 2 வரவு / 8 செலவு = நஷ்டம்