திருகோணமலையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!


அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (10) காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை திருகோணமலை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் அரசுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டனர்.