2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை இன்று (19) முதல் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விழா நிகழ்ச்சிகளை பாடசாலை மட்டத்தில் நடத்துமாறு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
மேன்முறையீட்டுப் பட்டியல் தொடர்பில் பிரச்சினை உள்ள பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.