யாழில் ரயிலுடன் ஜீப் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு!!


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில், கொடிகாமம் - மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வாகனத்தை மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.