கொழும்பில் அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை அகற்றுமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன் இன்று மாலை முதலாக அமைதிவழி போராட்டத்தை ஆரம்பித்தனர்
எனினும் பொலிஸ் வாகனங்களை போராட்டத்திலீடுபட்டிள்ளவர்களை நோக்கி பாதுகாப்பற்ற விதமாக பொலிஸார் நகர்த்த முயன்ற வேலையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது
இதனையறிந்த காலிமுகத்திடலில் உள்ள கூட்டத்தில் ஒரு பகுதியினர் அங்கு வந்து இதனை கண்டித்து எதிர்ப்பு நடவடிககையில் ஈடுபடுகின்றனர்
இந்த நிலையில் அங்கு மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.