(வி.சுகிர்தகுமார் )
கலாசார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 'தொலஸ் மகே பஹன ' எனும் கலாசார வேலைத்திட்டத்திற்கு அமைவாக பிரயோக கலைகளான கைவினைப்பொருள் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.கோகுலதாசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில்பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கைவினைப்பொருள் கண்காட்சியினையும் விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார்.
கலைஞர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கண்காட்சியில் தமது கைவினைப்பொருள்களை காட்சிப்படுத்திய கலைஞர்களான பி.சாந்தி மற்றும் ச.மகேசன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னங்களை பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.
குறித்த கண்காட்சியில் முற்றிலும் திண்மக்கழிவுப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது
நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்சான் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கைவினைப்பொருட்களை கொள்வனவு செய்தனர்.