நாடு பூராகவும் இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின்வெட்டு வெவ்வேறு நேரங்களில் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.