நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மா னித்துள்ளனர்.
அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.70 ஆகவும், மேலதிகமாக ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் நகர எல்லைக்குள் ரூ.55 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் திடீர் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டிச் சாரதிகள் தீர்மானித்துள்ள தாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் முதல் கிலோமீற்றருக்கு ரூ.80 ஆகவும், மேலதிக கிலோமீற்றருக்கு ரூ.60 ஆகவும் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை 50 ரூபாவினால் அதிகரித்த போதிலும், பொதுமக்களின் பயணத்துக்கு மேலதிகமாக 10 ரூபா மாத்திரமே அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் விலை மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.