கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக?- ஜோசப்ஸ்டன்லீ


கிழக்குமாகாணத்தில் கல்வி அதிகாரிகள் அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாகவே செயற்பட்டு வருவதனால் மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் மாநாடு மட்டக்களப்பில் மிகவிமர்சையாக நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ,உபதலைவர் தீபன் திலீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தரமான கல்வியூடாக நிலைபேறான எதிர்காலத்தினை உருவாக்க ஒன்றிணைவோம் என்னும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆசிரியர் சங்கத்தினால் 22கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு மாநாட்டினால் அங்கீகரிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் நிரந்தர மாகாண பணிப்பாளர் நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள் வலயங்களில் உள்ள ஆசிரியர் சங்க இணைப்பாளர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டன்லீன்,

கிழக்குமாகாணத்தில் அரசியல்வாதிகள் தங்களது நலனுக்காகவும் செயற்பாடுகளுக்காகவும் கல்வி அதிகாரிகளைப் பயன்படுத்திவருகின்றனர் இதனை அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு கண்காணித்து இச்செற்பாடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது. இலங்கை ஆசிரியர் சங்கமானது இலங்கையில் எவ்வித அரசியல் பக்கச்சார்புகளும் இல்லாது முiறாயாகச் செயற்படுகின்ற ஒருதொழில் சங்கமாக இருக்கின்றது இச்சங்கம் 1954 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது இதோடு 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடமாகாண ஆசிரியர் சங்கமும் இணைந்து சேவையாற்றிவருகின்றோம். இச்சங்கம் அரசியல் சார்ந்து செயற்படுவது இல்லை அரசியல் சார்ந்த பல தொழில் சங்கங்கள் இருக்கின்றன அவர்கள் அரசில்வாதிக்கு சாதகமாவே இருப்பார்கள் நாம் அப்படி இல்லை ஆசிரியர்களது நலன் சார்ந்து செயற்படுவோம் என்றார்.