12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. கப்பல் போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது. டொலரின் பெறுமதியும் எகிறியுள்ளது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே, எரிவாயு நிறுவனத்தால் மேற்படி விலை உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் எரிபொருள் உட்பட பல பொருட்களின் விலைகள் நேற்று அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.