மட்டக்களப்பு மாநகர சபையின் 48 வது பொது அமர்வும் 58 வது மாதாந்த அமர்வும் இன்று 04.03.2022 திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபையின் மேற்படி அமர்வானது மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மத்திய வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றுவதற்காக முன்மொழியப்பட்டதுடன், தற்காலிகமாக வேலை செய்யும் மாநகர சபையின் ஊழியர்களை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பது தொடர்பாகவும், நகர் பகுதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக மேலும் பல இடங்களில் வாகன தரிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாகவும், வாகன தரிப்பிடங்களுக்கான கேள்வி மனுக்கோரல் தொடர்பாகவும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் பல அபிவித்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போகி விவாதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.