Breaking News: இரண்டு கட்டங்களாக மின்வெட்டு- வெளியாகிய முக்கிய அறிவிப்பு...!!


இரண்டு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு , இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கும், மாலை 6.30 தொடக்கம் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் A,B,C,D என நான்கு வலயங்களின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இன்மையால் 400 மெகாவாட் மின்னுற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய மின்பிறப்பாக்கிகள் செயற்படவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இதனால் எதிர்பாராத விதமாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சில மின்னுற்பத்தி நிலையங்களில் இன்றிரவுடன் எரிபொருள் தீர்ந்துவிடும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சுமார் 600 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இழக்கப்படும் என்பதால், மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.