ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கிய சர்வதேச கட்டண முறையான "SWIFT" இல் இருந்து துண்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் மூலம் ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும், இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும்.
இது குறித்து கருத்து மேற்கண்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளன.
ரஷ்யா அதன் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ஸ்விஃப்ட் அமைப்பை பெரிதும் நம்பியுள்ளது.
இந் நிலையில் இந்த நடவடிக்கை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் மேற்கத்திய வணிகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
ஸ்விஃப்ட் அல்லது "உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்புக்கான சமூகம்" என்பது எல்லை தாண்டிய கட்டணங்களைச் சாத்தியமாக்கி, சர்வதேச வர்த்தகத்தை செயல்படுத்துகின்றமையும் குறிப்பிடத்கத்கது.