வான் வீதியை விட்டு விலகி விபத்து- நால்வர் படுகாயம்...!!


அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, பெரகலை பிளக்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.