பெற்றோல்-டீசலின் விலையை மீண்டும் அதிகரிக்க திட்டம்...!!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித் துள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்பட் டுள்ள நட்டத்தை ஈடுகட்ட விலை அதிகரிப்பு அவசியமானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது சிபெட்கோ ஒரு லீற்றர் பெற்றோலை ரூ.177க்கு விற்பனை செய்வதால், அதை ரூ.192 ஆக உயர்த்த வேண்டும் எனவும் தற்போது ஒரு லீற்றர் டீசலை 121 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதால், அதை 169 ரூபாவாக உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், வரலாற்றில் பெற்றோல், டீசலின் அதிகூடுதலான விற்பனை விலையாக இது இருக்கும்.