தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தினால் பொலிஸ் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின் றனர்.
அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள கசகல பொலிஸ் நிலையமொன்றில் இருந்து விடுமுறையில் சென்ற கான்ஸ்டபிள், நேற்று இரவு கடையொன் றுக்குச் சென்றிருந்த போது ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.