ஐந்து ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் அறிவிப்பு...!!


உக்ரேனின் லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்களும் ஒரு ஹெலிகொப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ரஷ்யாவால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரேனில் உள்ள பிரிவினைவாத பிராந்தியங்களில் லுஹான்ஸ்க் ஒன்றாகும்.

இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேனிய வான் பாதுகாப்பு 'நடுநிலைப்படுத்தப்பட்டதாக' கூறியுள்ளது.