எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஏற்படும் நட்டத்தை குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிப்பது தற்போதைக்கு அவசியமானது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் இது தொடர்பில் குறிப்பிட்ட அவர், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் முடிவெடுக்க முடியாத நிலையில், எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கூட்டுத்தாபனத்தினால் அரசாங்கத்திடமும் எரிசக்தி அமைச்சிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாத இறுதியில் கூட்டுத்தாபனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத போதிலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என்று நம்பிக்கையுள்ளதாகவும் கூறினார்.