கடந்தகால கசப்பான நினைவுகளை மறந்து சமாதானத்திற்கான ஒரு புதுயுகம் படைப்போம்...!!


கடந்தகால கசப்பான நினைவுகளை மறந்து சமாதானத்திற்கான ஒரு புதுயுகம் படைப்போம் என்ற உள ஆற்றுப்படுத்தளுக்கான ஒருநாள் ஒன்றுகூடல் இன்று மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எஸ்.மைக்கல் ஒருங்கிணைப்பில் நிறுவன இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தின் கிராம மட்ட பல்சமய ஒன்றிய சமாதான குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்க சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனம் தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்க செயல்பாடுகளுடன் கடந்தகால கசப்பான நினைவுகள் மறந்து சமாதானத்திற்கான ஒரு புதுயுகம் படைப்போம் எனும் உள ஆற்றுப்படுத்தளுக்கான ஒருநாள் ஒன்றுகூடல் நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி ஜொறோம் டிலீமா மற்றும் சமாதான நல்லிணக்க நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.றொபின்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.