வார இறுதியில் மின் தடை தொடர்பில் விசேட வேண்டுகோள்...!!


வார இறுதியில் மின் தடை வேண்டாம்  என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதன்காரணமாக, இவ்வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவுறுத்தியுள்ளார்.