பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் பாரிய அதிகரிப்பு...!!


லங்கா ஐஓசி தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.