இன்று 5 மணி நேர மின்வெட்டு...!!


சுழற்சி முறையில் இன்று நாடளாவிய ரீதியில் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மின்பாவனைக்கான கேள்வி எழுந்துள்ளதை தொடர்ந்து மின்விநியோகத்தை துண்டிப்பை அமுல்படுத்தும் நேரத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமையவே 5 மணித்தியால மின்விநியோக துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரையான பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் இன்று முதல் மின்விநியோகத்தை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று எ,பி.சி. ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் 4 மணித்தியாலமும், 40 நிமிடமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.