சாரணர் இயக்கத்தின் 165வது ஸ்தாபகர் தினம் இன்றாகும். சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் பிறந்த தினத்தைமுன்னிட்டு ஸ்தாபக தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் தினம் மட்டக்களப்பு திருநீற்றுபூங்காவில் உள்ள பேடன் பவலின் சிலையருகே நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் வி.பிரதீபன் அவர்களால் பேடன் பவலின் சிலைக்கு சாரணியர் பட்டி அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சாரணிய மாணவர்களினால் சாரணிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சத்தியப்பிரமான நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வினை தொடர்ந்து சாரணிய மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாரண ஆணையாளர்களினால் பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்;வில் சாரணிய உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணர் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், சாரணர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.