நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடை போகத்தில் மேலதிகப் பயிராக பயறு, பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட முடியாத நிலங்களில் இடை போகத்தின் மேலதிக பயிராகப் பயறை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி, விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.