முனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வறிய குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தையல் மற்றும் ஆடை விற்பனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தையலில் தேர்ச்சி பெற்ற முனைக்காட்டை சேர்ந்த வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தையல் திறமையை வைத்து தொழிலை முன்னெடுக்க மூலதனம் இல்லாது கஸ்ரப்பட்ட நிலையில் முனைப்பு நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது, குறித்த பெண்ணின் தையல் தேர்ச்சியை அவதானித்த முனைப்பு நிறுவனம் தையலுக்கான மூலப்பொருட்களைப் பெற்று ஆடைகளை தைத்து விற்பதற்காகன வாழ்வாதார உதவியை வழங்கியதற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட தையல் மற்றும் ஆடை விற்பனை நிலையம் இன்று முனைப்பு நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மா.குமாரசாமி, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயானந்தரவி மற்றும் நிருவாக சபை உறுப்பினர் சி.சிவறஞ்சினி, கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.