மட்டக்களப்பு மாவட்டம் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்...!!


ஓய்வூதிய காப்புறுதித் திட்ட அமுலாக்கலில் மட்டக்களப்பு மாவட்டம் தேசிய மட்டத்தில் இரண்டாமிடமும் மாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் மட்டக்களப்பை சேர்ந்த பிரதேச செயலகங்கள் கைப்பற்றியது.

இலங்கை சமுக பாதுகாப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஓய்வூதிய காப்புறுதித் அமுலாக்கத் திட்டத்தில் அதிக அங்கத்துவத்தினை இணைத்துக் கொண்டதில் மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. மகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் இம்மாவட்டத்தினைச் சேர்ந்த பிரதேச செயலகங்களே தட்டிக் கொண்டுள்ளன.

இதனடிப்படையில் தேசிய மட்டத்தில் இரண்டாம் அடைவினைப் பெற்றுக் கெண்டமைக்காக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இலங்கை சமுக பாதுகாப்பு சபையின் தலைவர் சமன் ஹன்டரகமவினால் இன்று (26) மாவட்ட செயலகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் தேசிய ரீதியில் அடைவினைப் பெற்றுக் கொண்டமைக்கும் மாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டமைக்காகவும் பிரதேச செயலாளர்களுக்கு மெச்சரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கொண்ட போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரட்னம், மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் ஆகியோருக்கு மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் தனிநபர் ஆட்சேர்ப்பு திட்டத்தில் இலங்கையில் முதலிடத்தினைப் பெற்றுக் கொண்ட கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். கான்;டீபன் மற்றும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துக் கொண்டமைக்காக அதே பிரதேச செயலகப் பிரிவைச்சேர்ந்த எம். எல் சியாத் ஆகியோருக்கும் மெச்சுரைகள் வழங்கப்படன.

இலங்கை சமுக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எம். அமீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக சிசுபாலன் புவனேந்திரன், சமுக பாதுகாப்பு சபையின் பிராந்திய இணைப்பாளர் பீ. பிரதீபன் உட்பட பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.