அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (06) மாலை சாகாம விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது புதையல் தோண்டலுக்கு பயண்படுத்திய உபகரணங்கள் மற்றும் கல்லுடைக்கும் இயந்திரம், ஜெனறேற்றர் மோட்டர்சைக்கிள் என்பனவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.