ஏர் இந்தியா நிறுவனத்தை முறைப்படி டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
சற்று முன் பிரதமர் மோடியுடன் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சந்திப்புக்கு பின் ஏர் இந்தியா கைமாறியது.
கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியது.
ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும் எஞ்சிய ரூ.15,300 கோடியை ஏர் இந்தியா கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்தது.