புகையிரதம் டிப்பர் வாகனத்துடன் மோதி கோர விபத்து...!!


ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று மீரிகம பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்துக்கு இடையேயான குறுக்கு வீதியில் பயணித்தபோதே இந்த அனர்த்தம் இன்று அதிகாலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் டிப்பர் வாகனமும் ரயிலும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதேநேரம் டிப்பர் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.