இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! கரடியனாறு பகுதியில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.

 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பொத்தானை பகுதியில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. இதில் சுமார்  07 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றிக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு இரகசிய இராணுவப்பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினரால்   குறித்த நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.