கட்டிடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவ சிப்பாய் பலி...!!


தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் விஞ்ஞான பீட கட்டிடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டிடத்தின் சுவரை இடிக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராணுவ சிப்பாய், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மடுல்சிமை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.