அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தின் காரணம் வெளியானது.

 

(புருசோத்)

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர், துப்பாக்கி பிரயோகம் நடத்தியதன் பின்னர் எத்திமலை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.

துப்பாக்கி பிரயோகம் நடத்தியமை தொடர்பில் இதன்போது தனது பெற்றோருக்கு அவர் கூறியதாகவும் அவரது தாய் குறிப்பிடுகின்றார்.

காலில் நடத்தப்பட்டிருந்த சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு பொலிஸ் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தனது மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.