பண்டிகை காலத்தை முன்னிட்டு நிவாரணப் பொதி...!!


எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சம்பா அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச கிளையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள விசேட பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுகின்றன.

உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் மரக்கறி பிரச்சினை மேலும் மோசமடையும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.