கடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 52 ஆண்டுகள் பழைமையானது. இதனை யாருக்கும் விற்க நாம் தீர்மானிக்கவும் இல்லை, அவ்வாறு விற்பதற்காக கேள்வி எழுமென நினைக்கவும் இல்லை.
உலகின் தற்போதைய தொழிநுட்பத்துடன் ஒப்பிடும் வேளையில் இது 52 ஆண்டுகள் பழைமையான தொழிநுட்ப முறைமையுடன் இயங்குகின்ற காரணத்தினால் இதனை கொண்டு நடத்துவதே கடினமாக உள்ளது.
ஆகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்க எந்த நோக்கமும் எமக்கு இல்லை. எவ்வாறு இருப்பினும் 50 நாட்களுக்கு இந்த நிலையத்தை மூடவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
அதேபோல் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம், கடந்த கலாத்தில் இதில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே ஒன்றில் விலை மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையேல் திறைசேரியின் மூலமாக நிவாரணம் வழங்க வேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யாத உலகில் ஒரே நாடு இலங்கை என்பதையும் சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
Share
தொடர்பான செய்திகள்
கடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த பிறழ்வு தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற காரணியும் ஆய்வு மட்டத்திலேயே உள்ளதாக வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீன ஜானக தெரிவித்தார்.
பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2)தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
ஐந்து வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான டொலர்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை ?
'ஒமிக்ரோன்' பிறழ்வு தாக்கம் குறித்து பல கோணங்களில் ஆய்வு - வைத்திய நிபுணர் நதீன ஜானக
அசாத் சாலியை விடுதலை செய்வதா ? மேல் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று
டொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு புரிதல் இல்லை - ஜே.வி.பி.

© 2021. Virakesari. All Rights Reserved.
தொடர்புகளுக்கு
இணைப்புகள்
வீரகேசரியுடன் இணையுங்கள்
OK
No campaigns