மட்டக்களப்பு- மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியின் கீழ் வழங்கும் வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தினால் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குள் நிரந்தர வீட்டு வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றினை அமைத்துக்கொடுப்பதற்காக பிரதேச செயலாளரும் பிரதேச செயலக நலன்புரிச்சங்க தலைவருமான திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் இனங்கானப்பட்ட பயனாளிகளிற்குள் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வீடு இல்லாத பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குடும்பத்திற்கான நிரந்தர வீட்டிற்கான அடிக்கல்லே இவ்வாறு நாட்டிவைக்கப்பட்டு, வீட்டிற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி, கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நலன்புரி சங்க செயலாளர் உள்ளிட்ட வீட்டினை பெற்றுக்கொள்ளவிருக்கும் பயனாளியின் குடும்பத்தினரும் இதன்போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.