இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்...!!


இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான நிலையான விலைகளை நிர்ணயம் செய்து அறிவிக்க மாட்டோம் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலைகள் தொடர்பில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக விலையினை நிர்ணயிக்க முடியாது என்றும், பேக்கரி உற்பத்தியாளர்கள் தகுதியான விலைகளில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு நிலையான விலைகளை நிர்ணயித்தது மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க அறிவுறுத்தியது.

எவ்வாறாயினும் பொருட்களின் நிலையற்ற விலையேற்றம் காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலையினை நிர்ணயம் செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.