பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தவருக்கு விருது...!!


மத அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரம் போராடியிருந்தார்.

அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி 'தம்ஹா ஐ சுஜாத்' என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.