அக்குரெஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அக்குரெஸ்ஸ பொலிஸ் பிரிவில் பெலிகெடி தொலஹேன , தலஹகம பிரதேசத்திலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பபரெந்த , கோட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் தலஹகம - பெலிகெடி பிரதேசத்தில் காணப்பட்ட அவரது வீட்டு வளாகத்தினை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்த போது, அயல் வீட்டிலுள்ளவர்களுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் மோதலாக தீவிரமடைந்த நிலையில் அயல் வீட்டிலுள்ள நபரின் மகன் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அக்குரெஸ்ஸ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.