பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமேவெல தோட்டத்தில் ஆலய உற்சவத்திற்காக நீர் ஏற்ற சென்ற டெமேரியா தோட்டத்திற்கு சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இத்துடன் உழவு இயந்திரத்தின் சாரதி மிகவும் ஆபத்தான நிலையில் கண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.