(புருசோத்)
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், வைத்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், பதவி உயர்வுகள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் இல்லை எனவும், தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக யாரேனும் கூறினால், அதனை நிரூபித்து காண்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் என்றார்.