மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலினால் நாசமாகும் பொருளாதாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை பகுதியில் உள்ள தோட்டமொன்று காட்டு யானைகளினால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை உன்னிச்சை இராஜதுரை நகரில் உள்ள தோட்டமொன்றே முற்றாக காட்டு யானைகளினால் இன்று அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் வேளான்மை,சோளம்,கச்சான் போன்ற பயிர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தினை யானை அழித்ததன் காரணமாக சுமார் 12இலட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக மக்கள் குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்திவரும் நிலையில் யானையின் தாக்குதல்களினால் பெருமளவான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.

குறித்த யானையின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தடவைகள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.