கிழக்கு மாகாண காணி ஆணையாளராக ரொஹான் சமிந்த தஸநாயக நியமனம்...!!


கிழக்கு மாகாணத்தின் புதிய காணி பரிபாலன திணைக்களத்தின் காணி ஆணையாளராக ரொஹான் சமிந்த தஸநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (திங்கட் கிழமை) திருகோணமலையிலுள்ள காணித் திணைக்கள அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.