முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீட்டருக்கான ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பின் மூலம் இதுவரை இருந்த வந்த 50 ரூபா ஆரம்ப கட்டணம் 80 ரூபாவாக உயர்த்தப்படும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி. ஆகியவை டிசம்பர் 20 நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையினை உயர்த்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.