காதலித்த 14வயது சிறுமியை அடித்து கொலை செய்த தந்தை மற்றும் சிறிய தந்தை- கம்பளையில் அதிர்ச்சி சம்பவம்...!!


கம்பளை, மவுன்ட்டெம்பல் பகுதியில் காதலித்ததாக தெரிவித்து தரம் 9ல் கல்வி கற்றுவரும் 14 வயதுடைய சிறுமி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தோடு தொடர்புபட்டதாக சிறுமியின் தந்தையும், சிறிய தகப்பனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தரம் 9ல் கல்வி கற்று வரும் குறித்த சிறுமியில் காதல் விடையம் காரணமாக சிறுமியினது சிறிய தகப்பனார் நேற்று சிறுமியை தாக்கியுள்ளார்.

அதன்பின் நேற்று காலை உடல்நிலை சரியில்லாமல் சிறுமி அழுதுள்ளார். இதன்போது சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளார்.

இதன்பின் தாயார் சிறுமியை அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின் மயக்கமடைந்த சிறுமியினை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (14) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின்சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையும், சிறிய தகப்பனாரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.