சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு...!!


நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்றைய தினம் குருணாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவியதாகத் தெரியவந்துள்ளது.