பாணின் விலை சடுதியாக அதிகரிப்பு...!!


450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களையும் 05 ரூபாவினால் அதிகரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.




சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.