சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான எழுத்து மூல பரீட்சைகளில் புதிய நடைமுறை...!!


சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சையை பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் கீழ் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.