(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அலுவலகத்தின் முன்னாள் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அமரர் சீனித்தம்பி கிருஷ்ணகுமார் முதலாம் ஆண்டு நினைவு கூரலை முன்னிட்டு இன்று போரதீவுப்பற்று பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டுக்குள் கல்வி கற்கின்ற 14 மாணவர்களுக்கு உயர்தர வினா விடை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் அமரத்துவம் அடைந்த வைத்திய அதிகாரி சீனித்தம்பி கிருஷ்ணகுமார் அவர்களின் நினைவு தினத்தில் பிறந்த கஷ்டத்தின் மத்தியில் உள்ள குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
அமரத்துவம் அடைந்த சீனித் தம்பி கிருஷ்ணகுமார் ( வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி) அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி நினைவு உரைகள் இடம்பெற்றன
இன் நிகழ்வில் வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி பேரின்பம் -விவேகானந்தன் மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மகப்பேற்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஊழீயர்கள் கலந்து கொண்டனர்.