2021ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டது...!!


2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


2021 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22 திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை, 2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் கற்றல் செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான காலப்பகுதியை ஆராய்ந்து , பரீட்சைகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.